Animation movie: "Nimona " Review | "நிமோனா திரைப்படம்" | South Reviewer
Nimona - Historical Sci-fi
நிமோனா திரைப்படம் ஒரு அறிவியல் புனைகதை வரலாற்றுத் திரைப்படம். இந்தப் படம் சில LGBTQ+ காட்சிகளைப் கொண்டுள்ளது என்பதை முன்பே கூறிக்கொண்டு ரிவ்யூவை பார்க்கலாம்.
தவறாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு (Knight) மாவீரர், நிமோனா என்ற கலகக்கார டீனேஜ் பெண்ணுடன் இணைந்து தனது மீதுள்ள குற்றச்சாட்டினை அழிக்க விரும்புகிறார், அதே நேரத்தில் அவள் குழப்பத்தை உருவாக்க nவிரும்பும் கதாபாத்திரம் . நிமோனாவுக்கு சிரமமின்றி வெவ்வேறு உயிரினங்களாக மாறும் தனித்துவமான திறன் உள்ளது. அவள் ஒரு குறும்புக்கார மற்றும் யாருக்கும் மரியாதை தராத பாத்திரம்.ஒரே பிரச்சனை என்னவென்றால், அவள் மான்ஸ்டர். இதில் பாலிஸ்டர் மற்றும் நிமோனா தான் முக்கிய கதாபாத்திரமாக உள்ளனர். இதில் பாலிஸ்டர் அரசியாரால் தத்து எடுக்கப்பட்ட ஒரு சாதாரமாண நபர் மற்ற பிரபுக்களின் வம்சாவழியினருடன் இணைந்து மாவீரன் பட்டம் பெரும் நேரத்தில் அவர் இதற்கு தகுதியானவரா?என்ற கேள்வி வருகிறது.இந்நிலையில் பட்டம் பெறும் நாளில் பாலிஸ்டர் கையில் உள்ள ஆயுதத்தால் ராணியார் கொலை செய்யப்பட அதன் பின்பு ஏற்படும் பிரச்சனைகளை நிமோனா என்ற பெண்ணுடன் சேர்ந்து தான் நிரபராதி என்று நிரூபிக்க முற்படுவதே கதை. இதில் நிமோனா என்ற கதாபாத்திரம் ஏன் அவனுக்கு (ஹீரோ) உதவுகிறாள் ? அவள் யார்? போன்ற கேள்விக்கு விடையை படத்தில் கூறி உள்ளனர்.
மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மான்ஸ்டர்கள் மற்றும் அதனுடைய உண்மை தன்மை போன்ற பழக்கமான கருப்பொருள்களை படம் பேசுகிறது. பாலிஸ்டர் மற்றொரு வீரரான அம்ப்ரோசியஸுடன் ஓரின சேர்க்கை உறவில் இருப்பது போல் உள்ளது. நிமோனாவின் கதாபாத்திரம் பற்றிய பிறரின் புரிதலுக்கு மாற்றத்திற்கு உட்பட வேண்டியதன் அவசியத்தை கூறுகிறது. பரபரப்பான சாகசங்களுக்கு மத்தியில், படம் சகிப்புத்தன்மை மற்றும் LGBTQ+ ஏற்றுக்கொள்ளதலையும் பரிந்துரைக்கிறது. அனால் இது பற்றி படத்தில் தெளிவாக விளக்க படவில்லை என்பதே உண்மை. அதாவது LGBTQ+ கட்சிகளுக்கு அவசியம் உணர்த்தப்படவே இல்லை . அந்த காட்சிகள் இல்லை என்றாலும் படத்தில் பெரிய பாதிப்பு இருக்கும் என தோன்றவில்லை .
கருத்துகள்
கருத்துரையிடுக