Miracle in Cell no.7 Turkish movie | South Reviewer

Miracle in Cell no.7  படத்தின் தமிழ் விமர்சனம் | நெகிழ்ச்சிக்கான நேரம்




    எல்லாருக்கும் வணக்கம், இந்த பதிவில் Miracle in Cell no. 7 படத்தின் விமர்சனம் தான் பார்க்க போகிறோம். வாழ்க்கையில் ஒரு தடவை ஆவது கண்டிப்பாக தவற விடாமல் கட்டாயம் பார்க்க வேண்டிய நல்ல படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று.விமர்சனத்தை முழுவதும் படித்துத் விட்டு படத்தினை பாருங்க அப்போது தான் நான் ஏன் அப்படி சொன்னேன் என்று உங்களுக்கு தெளிவாக புரியும். படத்தில் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள் உண்டு. 



கதையின் கரு: 

    ஒரு மனநிலை சரியில்லாத தந்தை செய்யாத கொலை குற்றத்திற்காக சிறைக்கு செல்கிறார். அவரின் சிறு வயது மகள் தாய் இல்லாத நிலையில் தன் தந்தையின் விடுதலைக்காக ஏங்கி நடத்தும் பாசப் போராட்டம், அதற்கு இடையில் சிறைக்கு உள்ளே நடக்கும் பலரின் மனநிலையின் மாற்றம் என படம் பார்ப்பவர்களின் மனதையும் சேர்த்து உருக வைக்கும் கிளைமாக்ஸ் என கொஞ்ச நாள் நமது மண்டைக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கும், அதுக்கு நான் கியாரண்டி. இதுக்கு அப்புறம் நான் சொன்னது நம்பி படம் பார்க்க போறவங்க நெட்ஃட் பிக்ஸ்- ல் Miracle in cellno.7 என்று தேடுங்கள். ஆனால் கொரியன், டர்க்கிஷ் (துருக்கி) இரு மொழிகளில் இருக்கும், ஆங்கில சப்டைட்டிட்-ல் உடன் தான் பார்க்க வேண்டும். நான் பார்த்தது டர்க்கிஷ். இதுக்கு அப்புறம் ஸ்பாய்லர் தான்... 




கேரக்டர் அலசல்: 

    முதலில் நாயகனான மகமூத் கதாபாத்திரம். இந்த கேரக்டர் மீதான நமது அன்பினை ஒவ்வொரு காட்சியிலும் அள்ளி செல்லும் அளவிற்கு கேரக்டர் எழுதப்பட்ட விதத்திலும் அதை திரையில் வெளிக்கொண்டு வந்த விதம் அட்டகாசம். நாயகன் மனநல பிறழ்வு கொண்ட கதாபாத்திரம். நாயகன் தன் மகளுடன் விளையாடும் போது குழந்தையாகவே மாறி போவதும், தன் தாயின் பிரிவு செய்தியை தனது மகள் (ஓவா) சொல்லி கேட்கும் போது தனது மனக்குமுறலை வெளிபடுத்தும் போதும், தான் இறந்து போனால் தனக்கு பின்னர் தனது மகளை யார் கவனித்துத் கொள்வது என்று வேதனையை வெளிபடுத்தும் காட்சி என படம் பார்க்கும் நமக்குள் உணர்வுரீதியாக ஆக்கிரமிப்பு செய்கிறார், மகமூத் (நாயகன்).




    ஓவா , மகமூத்- ன் மகளாக வரும் இந்த கதாபாத்திரம் கதையின் நாயகி எனவும் கூறலாம். அந்த குழந்தையின் நடிப்பு யதார்த்தில் மிளிர்கிர்றது. தனது பாட்டியிடம் தனது தந்தையின் மனநிலையை பற்றி கேட்கும் போது, தனது தந்தையை சிறைக்குள் மறைந்து சென்று சந்திக்கும் காட்சிகள், யாராலும் புரிந்து கொள்ள முடியாத சிறையில் உள்ள ஒரு பெரியவரின் மனதில் உள்ள சேதியை பற்றி பேசுவது, சிறையில் தனது தந்தையுடன் உள்ளவர்கள் செய்த தவறை பற்றி கேட்கும் இடம், இது போல் இன்னும் நிறைய.. அந்த ஓவா கதாபாத்திரத்திற்கும் அந்த குழந்தைக்கும் சபாஷ்..! 




    தனது மகளை பறி கொடுக்கும் தந்தையாகவும் அதற்கு மகமூத் தான் காரணம் என நினைத்துத் பழிவாங்க துடிக்கும் கதாபாத்திரமாக, தன் மீதான தவறை வெளியே தெரியாமல் சாட்சி சொல்ல வரும் சிப்பாயினை கொலை செய்து அதை மறைக்கக் கூடிய தருணம் என்று சில இடங்களில் நமது வெறுப்பினை பெறுகிறார் உயரதிகாரியான ஜெனரல் கதாபாத்திரம். 




        ஆரம்பத்தில் நாயகன் (மகமூத்) கொலை செய்து விட்டான் என நினைத்து கடுகடுவென வரும் ஜெயில் வார்டன் கதாபாத்திரம் படத்தின் இறுதியில் அவருடைய மனமாற்றம், ஜெயிலின் கமாண்டர் ஆக வரும் கதாபாத்திரம் மேலிடத்தின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு நடக்கும் போதும், நாயகன் மக்மூத் தவறு செய்யவில்லை என தெரிந்த பின்பு நாயகனை காப்பாற்ற அவர் செய்கின்ற முயற்சிகள் என கதாபாத்திரம் மிளிர்கிர்றது. மக்மூத் தாயாக வரும் கதாபாத்திரம், அந்த சிறுமிக்கு (ஓவா) உதவும் அவருடைய பள்ளிக்கூட ஆசிரியை, சிறையில் வரும் சக சிறைக்கைதிகள் என அனைத்துத் கதாபாத்திரமும் சிறப்பு தான். 




    பின்னணி இசையை படம் பார்க்கும் நம்மை படத்துடன் எளிதாக ஒன்றிணைக்கிறது. ஒளிப்பதிவும் தரம். இவையிரண்டும் சிறு சிறு தவறுகளை மறைத்து கொள்கிறது. இறுதியில் மக்மூத் எப்படியாவது உயிர் பிழைத்து விட வேண்டும் என மனம் கிடந்து அலையும். முடிவு பார்ப்பவர்களின் மனதை நெகிழ வைக்கிறது. 


நன்றி.! 
Please follow! If there is any mistake, please point it out in comment.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"Smugglers" 2023 Korean Movie | South Reviewer

Animation movie: "Nimona " Review | "நிமோனா திரைப்படம்" | South Reviewer

"GHOUL" Netflix Miniseries Review by SouthReviewer