"Smugglers" 2023 Korean Movie | South Reviewer
Smugglers Movie | Retro Waves: Unveiling the 1970s Korea"
படத்தின் பெயர்: "Smugglers" (2023)
வகைகள்: கிரைம் | திரில்லர்
மொழி: கொரியன் | மல்டி லாங்குவேஜ்
IMDb: 6.4
ஸ்டோரி பிளாட் :
எல்லாருக்கும் வணக்கம், இந்த பதிவில் "Smugglers" படத்தின் விமர்சனம் தான் பார்க்க போகிறோம். ஒரு ரெட்ரோ கால (1970களின்) கிரைம் ட்ராமாவான "Smugglers" படம் கொரியன் கடற்கரை கிராமத்தை கதை களமாக கொண்டுள்ளது. 1970களின் கொரியாவின் தனிமைப்படுத்தப்பட்ட கடலோரக் கிராமவாசிகள் கடலில் சிப்பி (Divers) எடுப்பது அவர்களின் வாழ்க்கையை வாழ்கிறார்கள். அந்த கிராமத்தில் திறக்கப்படும் தொழிற்சாலை காரணமாக கடல் வளம் கெட்டு போக அந்த டைவர்களை கடத்தல் தொழிலில் பணம் வரும் என ஆசை காட்டி ஈடுபடுத்துகிறார்கள். பின் அதில் வரும் பேராசை, துரோகம், பழிவாங்கல் என அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வு தான் "Smugglers" படத்தின் முழுக்கதை.
கதையின் போக்கு :
படத்தில் இரு பெண்கள் தான் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். அவர்களை சுற்றி தான் கதை நகர்கிறது. ஆரம்பத்தில் கடலில் முத்து குளித்தல் மற்றும் சிப்பி எடுக்கும் வேலையை செய்கிறார்கள். ஊரில் திறக்கப்படும் பேக்டரியால் அங்கு கடல் வளம் கெட்டுப்போய் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்க படுகிறது. அவர்கள் கடலில் மூழ்கி சிப்பி சேகரிப்பவர்கள் என்பதால் கடலிலின் உள்ளே போடப்படும் கடத்தல் பொருளை வேலையின்றி இருப்பவர்கள் மூலம் எடுக்க ஒருவர் தொடர்ந்து வற்புறுத்துகிறார். வேறு பிழைப்பின்றி அவர்கள் செய்ய பணம் அதிகமாக வருகிறது. நாயகியின் தந்தை ஒருகட்டத்தில் போதும் என சொல்ல நாயகியின் தோழி இறுதியாக ஒரு முறை என்று தங்கம் எடுக்க செல்கிறாரகள். அப்போது அங்கு கஸ்டம்ஸ் வர நாயகி தந்தை மற்றும் தம்பி இறந்து போக நாயகி உட்பட அனைவரும் ஜெயிலுக்கு செல்கிறார்கள். நாயகியின் தோழி தப்பி செல்ல அவர் தான் ஆள்காட்டி என எல்லாரும் நம்புகிறார்கள்.கதை சீயோல்-க்கு செல்கிறது.அங்கு நாயகியின் தோழி ஒரு சிறிய கடத்தல் வேலை செய்பவராக உள்ளார்.சியோலின் கடத்தல் மன்னன் இவரை மிரட்டி பணம் கேட்கும் போது தனது திறமையால் அவரது கடத்தல் தொழிலுக்கு தான் உதவுவதாக சொல்லுகிறார் .அதற்கு தனது பழைய கிராமத்துக்கு சென்று தனது பழைய ஆட்களின் உதவியை கோருகிறார். இதற்கு மேலே சொன்னால் பக்கா ஸ்பாய்லர் ஆகிரும் .அதனால மாப்பு இதோட கதை ஸ்டாப்பு . மீதி கதையான அந்த கஸ்டமஸ்க்கு தகவல் கொடுத்தது, அந்த கேங்ஸ்டருக்காக கடத்தல் பொருள் எடுத்தாங்களா, அவங்களுக்கு யாரு துரோகம் பண்ணுனாங்க, சரியான ஆளை தண்டித்தார்களா (revenge) என எல்லாமே படத்தை பாத்து தெரிந்து கொள்ளவும்.
படம் ஏன் பாக்கணும் :
கேன்ஸ் விழாவில் (Cannes festival) நல்ல வரவேற்பைப் பெற்றதைக் கேள்விப்பட்டதால் இந்தப் படத்தைப் பார்த்தேன். நல்ல ஆக்ஷன் விரும்பிகளுக்கு ஏற்றது .குறிப்பாக நீருக்கடியில் நடக்கும் இறுதி சண்டை காட்சிகள் , சிப்பி எடுக்கும் சீன் கள் என விஸ்வலாக அருமையான எக்ஸ்பீரியன்ஸ் . திரைக்கதையை (screen play) போரடிக்காமல் கொண்டு சென்றது, அதற்கேற்ப இசை என சகலமாக நல்ல படம் . இரண்டு நல்ல சண்டை காட்சிகள் உள்ளது .ரெண்டும் வொர்த் வர்மா .
முடிவு :
நல்ல ஆக்ஷன் மற்றும் கிரைம் மூவி ரசிகர்களுக்கு இந்த படம் ஏற்றது . நல்ல ஒரு விண்டஜ் எப்பெக்ட் கிடைக்கிறது. வீக்கெண்டிற்கு ஏற்ற படம். கொரியன் திரில்லர் மூவி பேன்ஸ் தவறாமல் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக