"GHOUL" Netflix Miniseries Review by SouthReviewer
"GHOUL" மிலிட்டரி முகாமில் ஒரு சைத்தான்
By சபாிஷ்.செ.வNetflix இன் மினி-சீரிஸ் ஆன , "GHOUL" ஆனது நிகழ்கால அரசியல் நிகழ்வுகளில் தொடங்கி, ரகசிய ராணுவ விசாரணை முகாமிற்கு கதை செல்லும் போது அங்கு நடக்கும் பல அமானுஷ்யங்கள் என கதை பல ட்விஸ்டுகளுடன் பரபரவென செல்கிறது. இது நல்ல வொர்த் வாட்ச் தான்.
முக்கிய கேரக்டரான ராதிகா ஆப்தே நிதா ரஹீம் என்ற கேரக்டரில் தேசிய பாதுகாப்புப் படை அகாடமியின் (NPA) கேடட் ஆக வருகிறார். அவரது தந்தையாக வருபவர் அதிகாரத்தை கேள்வி கேட்பதற்கும், சிறுபான்மையியினருக்கு எதிரான விதிமுறைகளை எதிர்த்து இளம் தலைமுறையை பேசுவைக்கும் ஒரு பேராசிரியர் கேரக்டர். நிதாவின் தந்தையின் முரண்பட்ட கருத்துக்கள் ,மதம் பற்றிய பிறரின் வெறுப்பு, தேசவிரோத செயல்கள் போன்றவற்றை கொண்டு முதல் எபிசோட் நகருகிறது. ஆரம்பத்தில் பொறுமையாக நகர்வது பின்பு ராணுவ முகாமிற்கு சென்ற பின் மிரட்டல் தொடங்குகிறது.
அல் சையத் என்ற குற்றவாளி விசாரணை செய்ய முகாமிற்கு அழைத்து வரப்படுகிறான். அவனை விசாரணை செய்யும் போதுதான் யாருக்கு தெரியாத ராணுவ அதிகாரிகளின் தனிப்பட்ட விஷயங்களை கூறி அவர்களை குற்ற உணர்வுக்குள் விழ செய்கிறான் .இதனால் அதிகாரிகளுக்குள் பிரச்சனை வந்து மரணம் நிகழ்கிறது . அங்கு நடக்கும் விஷயங்கள் மர்மாக இருப்பதாய் உணரும் ராதிகா ஆப்தே தனது உயர் அதிகாரியிடம் அங்கு இருப்பவன் அல் சையத் இல்லை சைத்தான் என கூற யாரும் ஏற்கவில்லை. "GHOUL" ஆட்டம் ஆரம்பம்.
ராதிகா ஆப்தேவின் நடிப்பு சிறப்பாக இருந்தது , அவரது கதாபாத்திரம் தேசப்பற்று மற்றும் தந்தை பாசம் இவற்றுக்கு இடையில் நிற்கும் காட்சிகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார். இவரை தவிர லெப்டினன்ட் கர்னல் சுனில் டகுன்ஹாவின் கதாபாத்திரம் , அல் சையத் ஆக வருபவர் போன்றவர்கள் மிரட்டி உள்ளனர் .பிற துணை நடிகர்கள் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக