"GHOUL" Netflix Miniseries Review by SouthReviewer
"GHOUL" மிலிட்டரி முகாமில் ஒரு சைத்தான் By சபாிஷ்.செ.வ Netflix இன் மினி-சீரிஸ் ஆன , "GHOUL" ஆனது நிகழ்கால அரசியல் நிகழ்வுகளில் தொடங்கி, ரகசிய ராணுவ விசாரணை முகாமிற்கு கதை செல்லும் போது அங்கு நடக்கும் பல அமானுஷ்யங்கள் என கதை பல ட்விஸ்டுகளுடன் பரபரவென செல்கிறது. இது நல்ல வொர்த் வாட்ச் தான். முக்கிய கேரக்டரான ராதிகா ஆப்தே நிதா ரஹீம் என்ற கேரக்டரில் தேசிய பாதுகாப்புப் படை அகாடமியின் (NPA) கேடட் ஆக வருகிறார். அவரது தந்தையாக வருபவர் அதிகாரத்தை கேள்வி கேட்பதற்கும், சிறுபான்மையியினருக்கு எதிரான விதிமுறைகளை எதிர்த்து இளம் தலைமுறையை பேசுவைக்கும் ஒரு பேராசிரியர் கேரக்டர். நிதாவின் தந்தையின் முரண்பட்ட கருத்துக்கள் ,மதம் பற்றிய பிறரின் வெறுப்பு, தேசவிரோத செயல்கள் போன்றவற்றை கொண்டு முதல் எபிசோட் நகருகிறது. ஆரம்பத்தில் பொறுமையாக நகர்வது பின்பு ராணுவ முகாமிற்கு சென்ற பின் மிரட்டல் தொடங்குகிறது. அல் சையத் என்ற குற்றவாளி விசாரணை செய்ய முகாமிற்கு அழைத்து வரப்படுகிறான். அவனை விசாரணை செய்யும் போதுதான் யாருக்கு தெரியாத ராணுவ அதிகாரிகளின் தனிப்பட்ட வி